வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc07


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > கலாச்சாரமும் சமுதாயமும்  > செய்தி


31/07/2010 14.32.26



பிரேசில் சிறைகளில் சித்ரவதைகள் நடத்தப்படுகின்றன, திருச்சபை கவலை







ஜூலை31,2010: பிரேசில் நாட்டில் இராணுவ சர்வாதிகார ஆட்சி இடம் பெற்று 25 ஆண்டுகள் ஆகிய பின்னரும் அந்நாட்டுச் சிறைகளில் சித்ரவதைகள் நடத்தப்படுகின்றன மற்றும் அதனைச் செய்வோர் தண்டிக்கப்படாமலே விடப்படுகின்றனர் என்று அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்தது.

பிரேசில் ஆயர் பேரவையின் சிறைப்பணி ஆணையம் தயாரித்துள்ள அறிக்கை குறித்துப் பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் அருட்திரு வால்டிர் ஜோவாவோ சில்வெய்ரா, சிறைகளில் சித்ரவதைகளுக்கு உள்ளான 211 பேர் பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன, எனினும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

திருச்சபைப் பணியாளர்கள் சிறைகளைப் பார்வையிட்ட போதும், கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் கைதிகளின் புகார் கடிதங்களை வைத்தும் இவ்வறிக்கைத் தயாரிக்கப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்படுவதாக அக்குரு தெரிவித்தார்.

14 ஆண்டுகள் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படாமலேயே சிறையில் ஒரு கைதி இருந்திருக்கிறார் என்றும் குரு சில்வெய்ரா குறை கூறினார்.

இதற்கிடையே, பிரேசில் நீதித்துறை அமைப்பு மிக மெதுவாக இயங்குவதாகவும், சட்டத்துக்குப் புறம்பே கைது செய்யப்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் கடந்த மாதம் 21 ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் எனவும் அந்நாட்டு தேசிய நீதித்துறை அமைப்பு கூறியுள்ளது.


  « அட்டவணைக்குச் செல்

 




31/07/2010 14.34.35
கத்தோலிக்க அரசுசாரா நிறுவனம் ஒன்று தமிழகத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது


31/07/2010 14.33.18
கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தம் இஞ்ஞாயிறன்று அமலுக்கு வருகிறது



30/07/2010 16.12.27
இந்திய மக்கள்தொகை 2050ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு



30/07/2010 16.11.36
சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமை: ஐ.நா.



30/07/2010 15.27.08
ஜூலை 31. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.




தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top